வரலாறு

ஏஐடியுசியின் 42வது அகில இந்திய மாநாடு

அணி திரள்வோம்

Published

on

Photo: Shutterstock

ஹைதராபாத்தில் பிப்ரவரி 5,6,7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஏஐடியுசியின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் முடிவு செய்த அடிப்படையில் ஏஐடியுசியின் 42வது மாநாடு, கேரள மாநிலம் ஆலப்புழாவில் 2022 டிசம்பர் 17 முதல் 20 வரை நடைபெறும். 16ம் தேதியன்று மாலை கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கும். ஏஐடியுசி சங்கங்களின் 2020ம் ஆண்டு உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

சென்ற மாநாடு 2016 பிப்ரவரியில் நடந்த போது, 2015ம் ஆண்டு உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் நடத்தப்பட்டது. எனவே 2016 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளுக் கான இணைப்புக் கட்டணத்தையும் செலுத்திய சங்கங்கள் மட்டுமே மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அனுப்பி வைக்க முடியும். இணைப்புக்கட்டண பாக்கி இருக்கும் சங்கங்கள் 2022, அக்டோபர் மாத இறுதிக்குள் 2021 வரை நிலுவையில்லாமல் மாநில லெவியையும் சேர்த்து கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கூட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்த மாநாட்டின் பிரதிநிதிகளை பின்வரும் வகையில் தேர்வு செய்யவேண்டும்.

1)500 முதல் 1000 உறுப்பினர் வரை உள்ள சங்கங்களுக்கு ஒரு பிரதிநிதி.

2) 1000க்கு மேல் 10,000 உறுப்பினர் வரையில் ஒவ்வொரு 2000 உறுப்பினருக்கும் ஒரு கூடுதல் பிரதிநிதி

3) 10,000 முதல் 20,000 வரையுள்ள உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு 4000 பேருக்கு ஒரு பிரதிநிதி.

4) 20000க்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு
ஒவ்வொரு 5000 பேருக்கும் ஒரு பிரதிநிதி.

5) 500 உறுப்பினர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட சங்கங்கள், உறுப்பினர் கூட்டுத்தொகை 500 வரும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சங்கங்கள் சேர்ந்து, கூட்டாக ஒரு பிரதிநிதியை அனுப்பலாம்.

6) மேற்சொன்ன வகையில். கணக்கிடும் போது, கடைசியாக எஞ்சி நிற்கும் உறுப்பினர் எண்ணிக்கை தேவைப்படும் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் ஒரு கூடுதல் பிரதிநிதியை அனுப்பலாம்.

இந்த அடிப்படையில் தேர்வு செய்யப் பட்ட பிரதிநிகள் பட்டியலை அமைப்புவிதி எண் 17(b) முதல் 17(i) அடிப்படையில் ஏஐடியுசி பொதுச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அதன்படி தமிழ்நாடு பிரதிநிதிகள் பட்டியலை தொகுத்து அனுப்ப இசைவாக, இணைக்கப்பட்ட சங்கங்கள் தங்கள் பிரதிநிதிகள் பட்டி யலை சங்கத்தலைவர் / செயலாளர் கையொப்ப மிட்ட கடிதத்தில் நவம்பர் 20 ஆம் தேதிக்குள் மாநில மையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். மாநாட்டு அரங்கில் இணைப்பு கட்டணமும் பெறப்படமாட்டாது. பிரதிநிதிகள் பட்டியல் அங்கு தந்து உடனே பிரதிநிதி அட்டையும் வழங்கப்படாது. எனவே, மாநாட்டு அரங்கில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள்.

1 Comment

  1. Jawn Staff

    July 7, 2017 at 2:50 pm

    Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem eum fugiat quo voluptas nulla pariatur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version