கோல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட, முதுகலைப் பட்டதாரி் பயிற்சி மருத்துவர் விவகாரத்தில் ஏஐடியுசி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இதில் கவலை கொள்ளத்தக்க அம்சம் என்னவென்றால், சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும், விசாரணையில் சொல்லும்படியான பெரிய முன்னேற்றம் இல்லை. நீதிக்காகவும், பெண் மருத்துவர்களின் கண்ணியம், பாதுகாப்பிற்காகவும் போராடுகிற மருத்துவர்களோடு ஏஐடியுசி இணைகிறது. குற்றத்தை விரைவில் விசாரித்து, கொடுங் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில், இது ஒரு கூட்டு வன்புணர்வு என்று தெரிய வருகிறது. எனவே இதில் பல குற்றவாளிகள் இருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில் இதனை தற்கொலை என்று சொன்னது, பெற்றோர்களை உடலைப்பார்க்க தாமதமாக அனுமதியளித்தது, சீக்கிரமாக எரியூட்டியது, கல்லூரியில் நடந்த தாக்குதல் போன்றவை பல கேள்விகளை எழுப்புகின்றன. பாரபட்சமின்றி இதனை மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரிக்க வேண்டும் என ஏஐடியுசி கோருகிறது.
இந்த கோரமான சம்பவம் பணித்தளத்தில் நடந்துள்ளது. பணித்தளம் பெண் மருத்துவருக்கு பாதுகாப்பாக இல்லை என்று தெரிகிறது. தொடர்ச்சியாக 36 மணி நேரம் அவருக்கு பணிகொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. நாகரிகம் உள்ள எந்த நாடும் மருத்துவர்களுக்கு தொடர்ச்சியாக 36 மணிநேரம் படிபுரிய அனுமதிக்காது. இந்தக் கொடூரமான சுரண்டல் மருத்துவரையும், நோயாளியையும் ஆபத்துநிலையில் வைக்கிறது. கூட்ட அறையில், மருத்துவரை ஓய்வெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதாவது, மருத்துவர்களுக்கு, குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு ஓய்வறை இல்லை. பெண்களை பணித்தளங்களில் பாதுகாப்பின்றி வைப்பது குற்றமாகும். இத்தகைய கொடூரமான சட்டவிரோதங்கள், அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காரணங்களாகும். அந்த மருத்துவ மனையில் மருத்துவர்கள், செவிலியர், மற்ற ஊழியர்களின் பணி நிலைமைகளை ஆராய வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது.
எல்லா மருத்துவமனைகளிலும் வேலைநேரம், ஓய்வு அறை, கழிப்பிட வசதி போன்ற பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், நீதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும், தெருவில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
கவலையிலும், கோபத்திலும் இயல்பான ஒவ்வொரு மனிதனும் இணைந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் இத்தகைய இழிவானதொரு சம்பவம் இந்தியாவை மற்றொருமுறை அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியா இத்தகைய பல வன்புணர்வுகளினால் அபகீர்த்தி அடைந்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்று அதிர்ச்சி தரும் பலவற்றை வெளிப்படுத்தி இருக்கிறது.
தண்டிக்கப்படும் விகிதம் குறைவாக இருப்பதானது, கடுமையான குற்றங்கள் குறித்து அக்கறை இல்லாததை காட்டுகிறது.இந்தியப் பெண்கள் விஷயத்தில் நீதித்துறை தோற்றுவிட்டது.
வன்புணர்வு என்பது, கொடுமையான, திட்டமிட்ட மனித உரிமை மீறல் என்பது மட்டுமல்ல, விலங்குகளைப் போன்ற வன்முறையானது, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் வேதனைக்கு உள்ளாக்குவதாகும்.
இத்தகைய கொடுங்குற்றங்களைக் கண்டு இந்திய மக்கள் மன உளைச்சல் அடைகிறார்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம், இங்கு நிலவும் கருத்தியலே.
நமது சமூக அரசியல் அமைப்பில் அப்படிப்பட்ட ஆணாதிக்க ஆழமாக நிலவுகிறது. பெரும்பாலான பாலியல் குற்றங்களில் நீதி மறுக்கப்பட்டுள்ளது. போராடி வருகிற மருத்துவர்களுக்கு ஏஐடியுசி தனது முழு ஆதரவை தருகிறது. ஏஐடியுசியின் உழைக்கும் பெண்கள் அமைப்பு எல்லா மாநிலங்களிலும் இணைந்து போராடி வரும் மருத்துவர்களோடு தனது ஆதரவைத் தரும்.