அரசியல்

தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டிய தொழிலாளி வர்க்க கோரிக்கைகள்

Published

on

  • ஒவ்வொரு ஆண்டும் இந்திய தொழிலாளர் மாநாட்டை நடத்துவதை உறுதி செய்தல்
  • பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுதல். நூற்றாண்டு காலமாக தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை இந்தச் சட்டம் பறிக்கிறது. இரத்து செய்யப்பட்ட தொழிலாளர் சட்டங்களை மீண்டும் கொடுவருதல். தொழிற்சங்கங்களோடு பேசி தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை மேம்படுத்தல்.
  • அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவைகளின் விலைகளையும் கட்டுப்படுத்துதல், பொது விநியோக முறையை வலுப்படுத்துதல்
  • அனைத்து திட்ட பணியாளர்களுக்கும் தொழிலாளர் என்ற நிலையை வழங்கி, அவர்களது பணிகளை நிரந்தரப்படுத்துதல்.
  • ஓர் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 200 வேலைநாட்களை உறுதி செய்தல், நாளொன்றுக்கு ரூ. 600 வீதம் ஊதியத்தை நிர்ணயம் செயதல். நகர்புறங்களுக்கும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துதல்.
  • அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 600 என நிர்ணயம் செயதல்
  • அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் அவைகளின் உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப பல்வேறு இருதரப்பு, முத்தரப்பு குழுக்களிலும், தூதுக் குழுக்கள் உள்ளிட்ட ஆலோசனை குழுக்களிலும் இடம் தருதல்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு உரிய கூட்டு ஆலோசனைக் குழுவை (JCM) முறையாக செயல்படுத்துதல், ஊழியர்களோடு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசுதல், அங்கு எட்டப்படும் முடிவுகளை அமலாக்குதல், கூட்டு ஆலோசனைக் குழுவின் கீழ் சமரசத்தீர்ப்புகளை (arbitration awards) உரிய காலத்தில் பெறுதல்.
  • படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவை திரும்பப் பெற்று, அவைகளை மீண்டும் அரசுத்துறையின் இயங்கும் ஆலைகளாக்குதல், கேந்திரமான இந்த ஆலைகளை சிறப்பாக செயல்படுத்த தொழிற்சங்கங்கள் தரும் மாற்று ஆலோசனைகளை பரிசீலித்தல்.
  • இரயில்வே, பாதுகாப்பு, பிஎஸ்என்எல், வங்கிகள், பொதுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, நிலக்கரி, சுரங்கங்கள் மருந்துகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், எஃகு, எண்ணெய், கனரக பொறியியல், கட்டுமானம் போன்றவைகளை தனியார்மயமாக்குவதை திரும்பப்பெறுதல். பொதுத்துறை பங்குகளை விற்பதை நிறுத்துதல்.
  • ஒன்றிய அரசிலும் அதன் நிறுவனங்களிலும் காலியாக இருக்கும் 12 இலட்சம் இடங்களையும், பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் 5 இலட்சம் இடங்களையும் நிரப்புதல்.
  • உத்திரவாதம் இல்லாத புது ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று, உறுதியளிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல்.
  • அனைவருக்கும் ஓய்வூதியம்; தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் – 95 ன்( EPS- 95) கீழ் குறைந்த பட்ச ரூ.9000.
  • ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் எட்டாவது ஊதியக் குழுவை அமைத்தல்.
  • குறைந்தது ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்குதல், வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ – க்கு பங்களிப்பு செய்ய உச்சவரம்பை நீக்குதல்.
  • இராணுவத்தில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள அக்னிவீர் திட்டத்தை திரும்பப் பெற்று, மீண்டும் நிரந்தர நியமனங்களை கொண்டுவருதல், ஏற்கனவே அக்னிவீர் திட்டத்தில் உள்ளவர்களை சகல பலன்களோடும் இராணுவத்தில் நிரந்தமாக ஏற்றுக் கொள்ளுதல்.
  • மத்திய அரசு ஊழியர்களின் சேவை தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும். உயர்நீதி மன்றமோ, உச்சநீதிமன்றமோ குறிப்பிட்ட வழக்குகளில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தபிறகு, அவை சட்டமாகும். அதேபோல நிலமையில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் அந்த பலன்களை விரிவுபடுத்த வேண்டும்.
  • இராணுவத்திலும், கடலோர காவல்படையிலும் வேலைவாய்ப்பிலும், பதவி உயர்விலும் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
  • தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கு படுத்த ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்றமானது, CGHS விகிதப்படி சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
  • பாராளுமன்ற குழு பரிந்துரைத்தபடி, நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் CGHS நல மையங்களை அமைக்க வேண்டும்.
  • எல்லா அரசுப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நவீன கல்வித் தேவைக்கு ஏற்ப வலுப்படுத்தி மேம்படுத்த வேண்டும்.
  • நாட்டில் உள்ள எல்லா அரசு மருத்துவமனைகளையும், நவீன மருத்துவ, பன்சிறப்பு சிகிச்சைக்கு ஏற்ப வலுப்படுத்தி மேம்படுத்த வேண்டும்.
  • ஆண்டுக்கு பத்து இலட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
  • இரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கும், மூத்த பெண்களுக்கும் மீண்டும் சலுகைகளை தர வேண்டும்.
  • கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அனுமதிக்கப்படும் முறையை பரிசீலிக்க வேண்டும். அதில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும். கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளோடு இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  • படைக்கலன்களில் பணிபுரிந்த ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, அவைகள் கார்ப்பரேஷன்களாக மாற்றப்பட்ட பிறகு பள்ளி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும்.
  • தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக்க வேண்டும். அதுவரை ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஊதியம் வழங்க வேண்டும். வெளிச்சந்தையில் ஆள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version