Uncategorized

கிக் தொழிலாளர்களுக்காக தனியான சட்டம் இயற்றுக

Published

on

வேலையில்லா திண்டாட்டம், பெருந்தொற்றுக் காலத்திற்கு பிறகான சூழல், வேலையில் நிகழும் மாற்றங்கள், விருப்பங்கள் போன்ற காரணிகளினால் நிச்சயமற்றதன்மை, பாதுகாப்பின்மை இருந்தாலும் சுதந்திரமாக செய்யும் வேலைக்கு வாய்ப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனால் சட்டபூர்வமான முறையில் பாதுகாப்பற்ற அமைப்புச்சரா தொழிலாளர்கள் பணிபுரியும் சூழல் அதிகரித்து உள்ளது.

சமீபத்தில் People’s Association in Grass roots Action and Movements என்ற அமைப்புஓமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களின் மோசமான சூழல்களை காட்டியுள்ளது. செயலிகளை வைத்துப் பணிபுரியும் மூன்றில் ஒரு பங்கு ஓட்டுநர்கள் நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கு மேலாகவும், 83 % ற்கும் அதிகமானோர் 10 மணி நேரத்திற்கு மேலாகவும், 60% ற்கும் அதிகமானோர் 12மணி நேரத்திற்கு மேலாகவும் பணிபுரிகின்றனர் என்ற நிலமையை வெளிப்படுத்தி உள்ளது.

43 % ற்கும் அதிகமானோர், எல்லா செலவும் போக நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கும் குறைவாக அதாவது மாதமொன்றுக்கு 15,000 ரூபாய் பெறுவதாக கூறியுள்ளனர். இது பெரும்பாலான தொழிலாளர்களின் மோசமான சூழலை காட்டுகிறது.

76 % பொருள் விநியோகிப்பாளர்கள் (delivery boy) பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறார்கள். இதுதான் இந்த தொழிலில் நிலவி வருகிறது.

முகவரியைத் தேடும்போது வரும் சிக்கல்கள், வாடிக்கையாளர்களின் தவறான நடத்தை போன்றவை செயலி மூலம் வேலை செய்யும் ஓட்டுநர்களுக்கும் விநியோகிப்பாளர்களுக்கும் மேலும் சிரமங்களைத் தருகின்றன.

பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்களுடையே நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு, பொருளாதார வேறுபாடு போன்றவை வறுமையை நிரந்தரமாக நீடிக்கச் செய்கின்றன.
நீண்டநேர வேலை அவர்களை சோர்வுக்கு உள்ளாக்குகிறது. சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் சூழல் உள்ளது. இதோடு இணையத்தினால் துரிதமாக பொருட்களை தர வேண்டும் என்ற அழுத்தங்களும் உள்ளன. வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு போன்றவை கூடுதல் அழுத்தங்களைத் தருகின்றன. அவர்களுக்கு சுகாதார ரீதியான ஆபத்துகளும் உள்ளன. பட்டியலின மக்கள் விகித்தாச்சாரத்திற்கும் புறம்பாக இப்பணிகளில் உள்ளனர். இதில் 60 % அதிகமானோர் 14 மணி நேரத்திற்கு அதிகமாக பணிபுரியும் சூழலில் உள்ளனர். மற்ற பிரிவினரில் 16 % மட்டுமே இவ்வாறு உள்ளனர் என அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, மற்ற பணி நிலமைகளை உறுதி செய்யும்வகையில், கிக் தொழிலாளர்களுக்கென தனியான சட்டம் இயற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version