இன்று 26 2 2024 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமேஸ்வரம் அரிச்சல் முனையில் தின்பண்டங்கள் விளையாட்டு பொருட்கள் சங்கு பாசி போன்ற பொருட்களை கைத்தட்டில் வைத்து பல வருடங்களாக தொழில் செய்து வந்த தொழிலாளர்களை அங்கு தொழில் செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தி விட்டனர்
மீண்டும் எங்களுக்கு தொழில் செய்ய அனுமதி தாருங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமேஸ்வரம் நகர செயலாளர் ஏ ஐ டியூ சி மீனவர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் சி ஆர் செந்தில் வேல் அவர்களுடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
மனுவை படித்து தூக்கி எறிந்து விட்டு தோழர் சி ஆர் செந்தில்வேல் அவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்
இச்செயல் மிகவும் வருத்தத்தக்கது ஜனநாயக நாட்டில் கோரிக்கை மனு கொடுப்பது அதன் மீது அரசினுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பது முறையாக இருக்கும்
மனு கொடுக்க வந்தவர்களை மிரட்டுவது என்பது தமிழக அரசினுடைய கொள்கை நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரான செயல்
எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இது போன்று நடந்து கொண்டது முறையற்ற செயல்
கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு மனுவின் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான பதிலை தராமல் மிரட்டுவது என்பது ஏற்புடையதல்ல இச்செயலை
ஏ ஐ டி யு சி இராமநாதபுரம் மாவட்ட குழு கண்டிக்கின்றது
இப்படிக்கு
என்.கே ராஜன் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ ஐ டி யு சி