* கண்மூடித்தனமான தாக்குதலால் விவசாய இளைஞர் கொல்லப்பட்டதையும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதையும் தொழிற்சங்கங்கள் கடுமையாக கண்டிக்கின்றன.
* இந்தியா முழுவதும் பிப்ரவரி 23 அன்று கறுப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும்.
அமைதியாக கண்ணூரி (khanauri), ஷம்பு (Shambhu) எல்லையில் இருந்த விவசாயிகள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், ஹரியானா காவல்துறையும் ஒன்றிய காவல் துறையும் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளன. பல்லோ (Ballo)கிராமத்தைச் சார்ந்த சரண்ஜித் சிங் என்பவரின் மகன் சுப்கரன் சிங் (Shubkaran Singh) தலையில் தாக்குதல் நடத்தியதால் கொல்லப்பட்டார். மேலும் பல விவசாயிகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை மத்திய தொழிற்சங்கங்களின் பொதுமேடை கண்டிக்கிறது. மூன்று விவசாயச் சட்டங்களை திரும்ப பெற்றபோது, ஏற்கனவே ஒன்றிய அரசு தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, விவசாயிகள் தலைநகரம் செல்ல முனைந்தனர். இதனால் அவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை, பிளாஸ்டிக் குண்டு வீச்சு ஆகியவை நடந்துள்ளன. பிப்ரவரி 16ஆம் தேதி விவசாயிகள் கூட்டியக்கமும், மத்திய தொழிற்சங்கங்களும் விடுத்த அறைகூவலுக்கு இணங்க, நாடு முழுவதும் நடைபெற்ற வெகுமக்கள் இயக்கத்தில் பங்குபெற்ற விவசாயிகளையும் தொழிலாளிகளையும் பாராட்டுகிறோம். இந்த வெற்றியானது ஒன்றிய அரசாங்கத்தை கவலைகொள்ள செய்துள்ளது. ஒன்றிய அரசாங்கமும், அந்த கட்சியால் ஆளப்படும் மாநில அரசாங்கங்களும் இணைந்து எப்பாடுபட்டேனும் சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் விவசாயிகள் எதிர்ப்பை நசுக்க முனைந்துள்ளன. அனைத்து அரங்கங்களைச் சார்ந்த ஆலைத் தொழிலாளர்களையும், அமைப்புச்சாரா தொழிலாளர்களையும் பிப்ரவரி 23 ஆம் நாளை கறுப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய தொழிற்சங்கங்களின் பொதுமேடை கேட்டுக்கொள்கிறது. அரசாங்கத்தின் இரக்கமற்ற அணுகுமுறையையும் கண்டிக்கும் வகையில், கருப்புபட்டைகள் அணிதல், உணவு இடைவேளைஆர்ப்பாட்டம், தர்ணா, பேரணி , மெழுகுவர்த்தி ஏந்தல் என சாத்தியமான எல்லா வழிகளிலும் பிப்ரவரி 23 அன்று தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். தொழிலாளர்- விவசாயிகள் ஒற்றுமையானது ஒருங்கிணைந்த விவசாய இயக்கம் எதிர்காலத்தில் விடுக்கும் அறைகூவலுக்கும் இணங்க வேண்டும். கார்பரேட்- மதவெறியை வளர்க்கும் தொழிலாளர் விரோத, விவசாய விரோத, தேசவிரோத கொள்கைகளை எதிர்க்க வேண்டும்
மத்திய தொழிற்சங்கங்களின் பொதுமேடை.